Wednesday, April 24, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்என்னடா இதெல்லாம் தலையே சுத்துதே ...ரெண்டாவது கல்யாணம் பண்ண 5 மாசத்துல குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்தா...

என்னடா இதெல்லாம் தலையே சுத்துதே …ரெண்டாவது கல்யாணம் பண்ண 5 மாசத்துல குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்தா பட நடிகை !!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அறுபதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்தா படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி

நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இதையடுத்து இந்த படத்தில் சிறுவயது ரஜினியின் அம்மாவாக நடித்து இருந்தவர் நடிகை அஞ்சலி நாயர் இவர் இதற்கு முன்னரே பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகி வரும் மாமனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவது முறையாக திருமணமான நிலையில் ஐந்தே மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம்

திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரித்த போது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே திரைப்பட இயக்குனரான அனீஷ் உபசானவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆவ்னி எனும் மகளும் உள்ளார். இவ்வாறு இருக்கையில் சில காலங்களிலேயே இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர் அதன் பின்னர் தனியாக வாழ்ந்து வந்த அஞ்சலி உதவி இயக்குனரான அஜித் ராஜுவை காதலித்து வந்தார். மேலும் இருவரும் திருமணத்திற்கு முன்னரே நெருக்கமாக பழகி

வந்த நிலையில் இந்த தகவல்கள் திரையுலகில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவரை திருமணம் செய்து கொண்டதாக அக்ஞ்சலி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்நிலையில் திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன நிலையில் அஞ்சலி பெண் குழந்தையை பெற்று எடுத்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது மேலும் தனது இணையபக்கத்தில் தனது கணவர் மற்றும் மூத்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அஞ்சலி….

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments