அப்பாவும் மகனும் ஒரே படத்தில் …. தனது மகனுடன் காமெடி கூட்டணியில் களம் இறங்கிய நடிகர் செந்தில் !!!

286

தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல புதுமுக காமெடி நடிகர்கள் புதிதாக படங்களில் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு அந்த காலத்தில் இருந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருவதோடு பலரை தனது ரசிகர்களாக இன்றளவும் வைத்திருப்பவர் பிரபல

முன்னணி காமெடி நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் லூட்டிகளும் மக்கள் மத்தியில் அந்த காமெடியை பார்க்கவிட்டாலும் காதில் கேட்டாலே போதும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படி இருக்கையில் பல வருடங்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீபகாலமாக கவுண்டமணி அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் நிலையில் செந்தில் அவ்வபோது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்

தற்போது நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தடை உடை படத்தில் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடன் இணைந்து இவருடைய மூத்த மகனான மணிகண்ட பிரபுவும் இந்த படத்தில் இவருக்கு மகன் கதாபாத்திரதிலேயே நடித்து வருகிறார். செந்தில் அவர்களுக்கு இருமகன்கள் உள்ள நிலையில் மூத்த மகனான மணிகண்ட பிரபு பல மருத்துவராக தனது தந்தை

பெயரிலேயே சென்னையில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் இந்த படத்திற்கு முன்னரே ஒரு படத்தில் நடித்துள்ளார் இப்படியிருக்கையில் தற்போது மீண்டும் தந்தையுடன் இணைந்து இந்த படத்தில் நடித்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here