பிரபல முன்னணி காமெடி நடிகர் வீட்டில் நடந்த கோர சம்பவம் ….. வீட்டிலேயே சடலமாக தொங்கிய அவரது மனைவி …….

1193

கடந்த சில வருடங்களாவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து நம்மை விட்டு பிரியும் நிலையில் காலமாகி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர நிகழ்வு நடந்துள்ளது அந்த வகையில் மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து

வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம். இவர் மலையாளத்தில் பல முன்னணி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தொடர்களில் நடித்து உள்ளதோடு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல முன்னணி நடிகரான மம்மூட்டியின் தெய்வந்திட்டே ஸ்வந்தம் கிளிடஸ் எனும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை தொடர்ந்து பல [படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு

இந்திரஜித், சூர்யஜித்  என இருமகன்கள் உள்ளனர். இதையடுத்து தனது குடும்பத்துடன் உல்லாஸ் கேரளாவில் உள்ள முக்கய நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உல்லாஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார் அதில் தனது மனைவி காணவில்லை எனவும் அவரை கண்டுபித்து தருமாறும் அதில் கூறியிருந்தார். இதையடுத்து அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டிலேயே விபரீத நிலையில் இருந்த அவரது மனைவியின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த போது அவரது மனைவி காலமான

போது உல்லாஸ் வீட்டிலேயே இருந்துள்ளார் மேலும் இந்த நிகழ்விற்கு முந்தைய நாள் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆஷா தனது இரு மகன்களுடன் மாடியில் தூங்கியுள்ளார். அதன் பின்னரே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கிறது எனவும் கூறிய நிலையில் இந்த வழக்கில் புது திருப்பமாக ஆஷாவின் தந்தை எனது மகளுக்கு மனநல பிரச்சனை காரணமாக இதுபோன்று செய்து கொண்டதாகவும் இதற்கும் உல்லாஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். இந் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here