Tuesday, March 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சூப்பர் ஸ்டார் ரஜினி சொந்தகுரலில் பாடியுள்ள ஒரே பாடல் .... அதுவும் எந்த...

சூப்பர் ஸ்டார் ரஜினி சொந்தகுரலில் பாடியுள்ள ஒரே பாடல் …. அதுவும் எந்த படத்துலன்னு தெரியுமா …?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரது 72-வது பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து இவருக்கு பல  முநண்ணி திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்தது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் குறித்த பல

சுவாரசியமான தகவல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த வயதிலும் பல இளம் நடிகர்களுக்கு இணையாக படங்களில் மாஸ் காட்சிகளில் நடித்து வரும் ரஜினி அவர்கள் தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை தொடர்ந்து மேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ரஜினி குறித்த பல அரிய தகவல்கள்

வெளியாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் ரஜினி அவர்கள் இதுவரை விளம்பர படங்களில் அவ்வளவாக நடித்தது இல்லை மேலும் ஒரு முறை மட்டுமே குளிர்பான விளம்பரத்தில் துவக்கத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த விளம்பர படங்களிலும் நடித்ததில்லை. இதேபோல் ரஜினி நூறுக்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ள போதிலும் இதுவரை படங்களில் இவரது

சொந்தக்குரலில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அதுவும் எந்த படம் தெரியுமா,கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மன்னன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் அடிக்குது குளிரு பாடலை பாடியுள்ளார் . அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட்டாகிய நிலையிலும் பலருக்கும் இந்த பாடலை பாடியது ரஜினி தான் என தெரியாது. இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது…….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments