அந்த நாள்ல அவரு என்ன பண்ணுவாரு தெரியுமா ? சூர்யாவின் சீக்ரெட்டை தெரியாமல் உளறிகொட்டிய ஜோதிகா …..

257

தென்னிந்திய திரையுலகில் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கும் பல முன்னணி பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். இருப்பினும் இதில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா ஜோடிகளும் தங்களது இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பல வருடங்களாக ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வருவதோடு பலருக்கும் எடுத்துகாட்டாக வாழ்ந்து வரும் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா.

இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனது அதிலும் இவர்கள் இணைந்து நடித்த காக்க காக்க படத்தில் இவர்களது ரோமன்ஸ் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தது எனலாம். அந்த வகையில் இந்த படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார் ஜோதிகா. இந்நிலையில் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்

இதையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது ஹீரோயினாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா தனது கணவர் சூர்யா குறித்த பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் சூர்யாவிற்கு எவ்வளவு பிசியான சூட்டிங் இருந்தாலும் குழந்தைகளின் பள்ளி ஆண்டுவிழா, விளையாட்டு விழாவிற்கு தவறாமல் கலந்து கொள்வாராம் அதுவும் சூட்டிங்கில் இருந்தால் கூட அதை அப்படியே விட்டுவிட்டு வந்து விடுவாராம். இதைத்தாண்டி குழந்தைகள் சம்பந்தம்பட்ட

நாட்களை மறக்காமல் காலண்டரில் குறித்துவைத்து அந்த நாட்களில் வேறு எந்த வேலை இருந்தாலும் இதற்கே முக்கியத்துவம் கொடுப்பார். மேலும் அதிக நேரத்தை அவர் குழந்தைகளுடன் செலவழிக்கவே விரும்புவார் சூட்டிங் இல்லாத நாட்களில் குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விடுவதே சூர்யா அப்படி அவர் இல்லையென்றால் மட்டுமே சிவகுமார் போவாராம் என கூறியதோடு இதுவரை சூர்யா ஒரு நல்ல அப்பாவாக தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார் என பெருமையாக கூறியுள்ளார் ஜோதிகா. இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here