தனது கணவரை விவாகரத்து செய்தாரா பிரபல தொகுப்பாளினி பிரியங்கா …காரணம் குறித்து வெளிப்படையாக பேசிய அம்மிணி !!!

455

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சேனலில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு தனது நகைச்சுவையான பேச்சாலும் குறும்புத்தனமான நடிப்பாலும் பலரது ,மனதை

கவர்ந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உட்பட பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்சமயம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பிக்பாசில் கூட பிரியங்கா தனது

கணவர் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை மேலும் பிரீஸ் டாஸ்க்கில் கூட அவரது கணவர் வீட்டிற்க்குள் வரவில்லை. மேலும் பிரியங்கா பிக்பாசில் இருந்து வெளியேவந்த பிறகு இணையத்தில் அவரது ரசிகர்களுடன் நேரலையில் பேசும்போது கூட அவரது ரசிகர்கள் பிரவீன் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை அவர் எங்கே என பல கேள்விகளை எழுப்பிய நிலையில் இதற்கு பதில் கொடுத்த பிரியங்கா எல்லோரும் ப்ரவீன் பற்றி கேட்கிறீர்கள் இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என கூறியிருந்தார் . இப்பட்டி இருக்கையில் பிக்பாசில் கலந்து கொள்வதற்கு முன்னர் வெளியான வீடியோவிலும் அவரிடம் பிரவீன் பற்றி கேட்டதற்கு அவருக்கு கேமரா முன் வருவது என்றாலே கூச்சம் அது இல்லாமல் அவர் முன்பு வரவே மாட்டார் எனவும்

சொல்லியிருந்தார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் கூட தனது சகோதரனுக்கு  குழந்தை பிறந்து இருந்த நிலையில்  அப்போது அந்த குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டு இருந்த பிரியங்கா அப்போது கூட தனது கணவரை காட்டவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது முதன்முறையாக தனது கணவர் குறித்து பதில் கொடுத்து உள்ளார். அதில் ரசிகர் ஒருவர் எப்படி நீங்கள் திருமணமான பிறகும் எல்லாவற்றையும் சாதரணமாக எடுத்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு அதற்கு உங்களை புரிந்து கொள்ளும் கணவர் உங்களுக்கு இருந்தால் அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும் என கூறியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியான நிலையில் அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டாரா இல்லையா என தெரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் ….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here