விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு இல்லையாம் …. நான் தான் என சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் !!!

304

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி நடிகர்களாக பல நடிகர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் சிறுவயதிலேயே தனது ஸ்டைலான நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்து பல இளைஞர்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்தது மட்டுமின்றி பல இளம் காதலர்களின் மனதில் நீங்காத

இடத்தை பிடித்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைபடத்தை பிரபல முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார் மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜெஸ்சி எனும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து கலக்கியிருந்தார். இப்போதும் பல இளசுகளின் காதல் படங்களின் டாப் லிஸ்ட்டில் நிச்சயம் இந்த படம் இருக்கும் எனலாம் அந்த அளவிற்கு காதல் ரோமன்ஸ் , வசனம் பாடல் என எல்லாவற்றிலும்

சிறப்பாக இடம் பிடித்து இருந்தது. சொல்லோபோனால் பல வருடங்கள் கழித்து சிம்வுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாகவும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது இந்த படமாகத்தான் இருக்கும். இந்நிலையில் இவ்வளவு பிரபலமான இந்த படத்தில் முதலில் நடிக்கயிருந்தது சிம்பு இல்லையாம் நான் தான் என பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் . அந்த நடிகர்

வேறுயாருமில்லை பிரபல நடிகரான ஜெய் தான் அது ஆமாம் இவர் தான் முதலில் அந்த படத்தில் நடிக்க தேர்வு ஆகியிருந்தராம் ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here