தளபதி ரசிகர்களை கடுப்பாக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ….உங்கள நம்புனதுக்கு நல்லா பண்ணிட்டீங்க போங்க ….

1042

தென்னிந்திய திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பதோடு பல முன்னணி இயக்குனர்களுக்கும் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் பிரபல முன்னணி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் முதல் அணைத்து படங்களும் வசூல் ரீதியாக நல்ல பலனை கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது. இதையடுத்து இவரது இயக்கத்தில்

நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் லோகேஷ் அடுத்து தளபதி விஜயை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது இதையடுத்து இவர்களது கூட்டணியில் அடுத்த படம் எனும் நிலையில் அவர்களது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது இப்படி

இருக்கையில் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படபிடிப்பை தொடங்க உள்ளார் எனவும் அதேபோல் லோகேஷ் படத்தின் முழு கதையையும் முடித்து வைத்திருப்பார் என அவரது ரசிகர்கள் எண்ணி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் அடுத்த படத்திற்கான வேலையை இன்னமும் ஆரம்பிக்கவில்லை இனிதான்

அதற்கான வேலையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கடந்த பத்து நாட்களாக தான் அடுத்த படத்திற்கான கதையை எழுத தொடங்கி உள்ளேன் இன்னும் அது முடிய சில நாட்கள் ஆகையால் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது …

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here