லோகேஷுக்கு கார் , சூர்யாவுக்கு வாட்ச் …லிஸ்ட்ல அடுத்து அனிருதுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

340

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியுடன் ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே வசூல் ரீதியாகவும் மற்றும் பல வகைகளிலும் பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா , காளிதாஸ் உட்பட பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல

இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து கலக்கியிருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்த நிலையில் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கும் கமல் அவர்கள் இந்த படத்தில் பணிபுரிந்த பலருக்கும் தனது அன்பை வெளிபடுத்தும் விதமாக பல பரிசுகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் சீனில் வெறும் மூன்று நிமிடமே வந்தாலும் தனது ரொலெக்ஸ் கேரக்டர் மூலம் மாஸ் காட்டிய சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்புள்ள ரொலெக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்துள்ளார் அதுமட்டுமின்றி அடுத்த படத்தில் சூர்யா கதை முழுதும் நடிக்க

உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இவர்களை அடுத்து இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த பதிமூன்று நபர்களுக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களை போலவே இந்த படத்தில் மேலும் சிறப்பாக நடித்திருந்த இசையமைத்து இருந்த விஜய் சேதுபதி, பகத் பாசில் , அணிருதுக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் எனும் கேள்வி தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. இப்படி இருக்கையில் கமல் இவர்களுக்கு இன்னும் எந்த

பரிசையும் வழங்கவில்லையாம் இருப்பினும் இதற்கான பதில் குறித்து கூறியுள்ளார் அனிருத். சமீபத்தில் லோகேஷ் மற்றும் அனிருத் இருவரும் கேரளாவில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றுக்கு சென்றபோது அங்கு ரசிகர் ஒருவர் அணிருதிடம் கமல் அவர்கள் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என கேட்டுள்ளார் அதற்கு எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததே பெரிய பரிசாக நினக்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here