சின்ன வயசுல இவ்ளோ பவ்யமாக இருக்குற இந்த குழந்தை யாருன்னு தெரியுமா …? இப்போ தென்னிந்திய சினிமாவுல தலைவரோட லெவலே வேற ……

1112

கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் தொடர்ந்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த வழக்கம் தென்னிந்திய அளவில் அதிகரித்த நிலையில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் இதை டிறேண்டிக்காக செய்து வரும் நிலையில் தற்போது சோசியல்

மீடியாவில் சிறுவயது சிறுவன் ஒருவரின் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது. சிறு வயதில் சும்மா செம கியுட்டாக இருக்கும் இந்த சிறுவன் யாரென தெரியுமா..? இது வேறு யாருமில்லை தற்போது தென்னிந்திய சினிமாவில் தனது மிரட்டலான நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் ராணா டகுபதி தான் அது. தெலுங்கை பூர்விகமாக கொண்ட

தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளதோடு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் ஹீரோ, வில்லன் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராஜாமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் பலத்த பிரபலத்தை அடைந்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தார். இதனைதொடர்ந்து பல படங்களில் பிசியாக

நடித்து வரும் ராணா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் எனும் நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதோடு அவரது பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நம்ம ரானாவா இது சத்தியமா நம்ப முடியல என வாயடைத்து போயுள்ளனர்…….

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Miheeka Daggubati (@miheeka)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here