மகன் இருக்கும் நிலையில் காதல் வலையில் விழுந்த பிரபல சீரியல் நடிகை … அவரே வெளியிட்ட அந்த நபரின் புகைப்படம் … விரைவில் திருமணம் !!!

379

வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களுக்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே அதிகளவில் விரும்பி பார்க்கபட்டு வருவதோடு பலத்த பிரபலத்தையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரில் செந்தில், ரக்ஷிதா, ராஷ்மி போன்ற பல முன்னணி சின்னத்திரை

பிரபலங்கள் நடித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த தொடரில் வடிவு எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை தீபா. இவர் இந்த தொடருக்கு முன்னரே பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த தொடர் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது பிரியமான தோழி, அன்பே சிவம் போன்ற

பல முன்னணி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக நடித்து வரும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அது குறித்து விசாரித்த போது இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாக சாய் கணேஷ் பாபு என்பவரை காதலித்து

வருவதோடு அவருடன் அடிக்கடி வெளியில் செல்வது நெருக்கமாக புகைப்படங்களை எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிடுவது என இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கையில் தற்போது அவரை திருமணம் செய்து கொள்ளபோவதாக இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பதிவையும் போட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here