தற்போது வெள்ளித்திரையில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தவர்கள் தான். அந்த அளவிற்கு சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து பலத்த பிரபலத்தை அடைந்து இன்றைக்கு சினிமாவில் ஹீரோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சன்
டிவியில் வெளியான தெய்வமகள் சீரியலில் கதையின் நாயகியாக நடித்து பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து திரையுலகில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒ மை கடவுளே படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகனவார் பிரபல இளம் நடிகை வாணி போஜன். நடித்த முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டதை
அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட பிரபல நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த திரில்லர் படமான மிரள் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து தற்போது பிரபல நடிகர் ஜெய்யுடன் ரொமண்டிக் நிறைந்த படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில்
போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அம்மிணியின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம டிரண்ட் ஆகி வருகிறது. காரணம் அந்த புகைப்படத்தில் அம்மிணி சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே வேற லெவல் அழகில் போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த பலரும் அவரை சகட்டுமேனிக்கு வர்ணித்து தள்ளி வருகின்றனர்…….