முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக துவங்க உள்ளதை அடுத்து இந்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்பது போல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது மேலும் இந்த சீசனில் பல புது மாறுதல்கள் கொண்டு வந்த நிலையில் இதில் எந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள
உள்ளார்கள் எனும் தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி பெரும் ஆர்வத்தை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் இந்த சீசன் பிக்பாசில் மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா , ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்திரஜா , விஷ்ணு, சத்யா, அனன்யா , மூன் நிலா, பிரபல சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜ் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக பிக்பாஸ் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அடுத்து யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் எனும் நிலையில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தலைவா படத்தில் அவருடன் நடித்த நடிகரும் நடன கலைஞருமான விஜய் வர்மா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என கூறியுள்ளனர். அதோடு முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து
கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக கலந்து கொண்டு தற்போது திரையுலகில் பல முன்னணி படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வரும் பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி அவரது கணவரான பார்த்த சாரதி அவரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………..