கடந்த சில வாரங்களாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்த சர்ச்சையான நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து முன்னணி இசையமைப்பாளர் டி இமான் தனது இணைய பக்கத்தில் பேசி வெளியிட்ட வீடியோ தான் அது. அதில் பேசியிருந்த அவர், அவர் எனக்கு துரோகம் பண்ணிட்டாரு எனக்கும் எனது முதல் மனைவிக்கும் விவாகரத்து நடக்க காரணமே அவர் தான் என
சர்ச்சையாக பேசியிருந்தார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலவிதமாக விமர்சிக்கபட்ட நிலையில் இது குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா கூறுகையில் சிவா எங்கள் குடும்பத்திற்கு நல்ல நண்பர் அவர் எங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்த போது அதை கண்டுகொள்ளாமல் இருந்ததையே இமான் தவறாக சித்தரித்து வருகிறார்
அதோடு அவர் தன்னை மீண்டும் பிரபலபடுத்தி கொள்ள இந்த மாதிரி செய்து வருகிறார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் வீடியோ ஒன்றில் பேசிய டி இமான் , “இறைவன் பார்த்து கொள்வார் எது சரி தவறு என்று மனிதர்களை தாண்டி இறைவனுக்கு நன்றாகவே தெரியும் அவர்தான்
இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைப்பார்” என சூசகமாக பேசிய நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருவதோடு பலரும் இதை வேறு மாதிரியான கண்ணோடட்டதில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் …………………