என்னங்க இந்த வீட்லையா இருந்தாரு …. நடிகர் விவேக் பிறந்து வளந்த வீடு எதுன்னு தெரியுமா ? நம்பவே மாட்டீங்க ….

350

பொதுவாக படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த படங்களில் காமெடி நடிகர்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நாகேஷ் தொடங்கி யோகிபாபு வரை இன்றைக்கு பல காமெடி நடிகர்கள் நம்மை படங்களில் சிரிக்க வைத்து வருகின்றனர் இவர்களுக்கு மத்தியில் தனது நகைச்சுவையில் மக்களுக்கு பல சிந்தனைமிக்க கருத்துகளை திணித்து அதனை மக்களிடையே எளிமையான முறையில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் சின்ன கலைவாணர்

விவேக் அவர்கள். பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் காமெடியனாக நடித்துள்ள இவர் பல படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். திரையுலகை தாண்டி நிஜ வாழ்க்கையில் பொதுநல தொண்டுகளின் அதித ஆர்வம் கொண்ட இவர் அய்யா அப்துல்கலாம் அவர்களை தனது குருவாக கொண்டு பல சமூக சீர்திருத்த செயல்களை செய்துள்ளார். மேலும் தன்னுடன் தனி ஒரு முயற்சியில் லட்சகணக்கான மரங்களை வைத்துள்ளார் பலருக்கும் இது போன்ற செயல்களை செய்ய பெரிய தூண்டுதலாக இருந்துள்ளார். இவ்வாறு இருக்கையில்

இவர் கடந்த ஆண்டு எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர் மறைந்து ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதில் அவரது கனவு திட்டமான ஒரு கோடி மரங்களை நடும் திட்டத்தை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் தொடங்கி இருந்தார். இவ்வாறான நிலையில் சமீபத்தில் விவேக் அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் அவரது வீடு மற்றும் அது பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி

வைரலாகி வருகிறது. இவரின் சொந்த ஊர் கோவில்பட்டி எளிமையான குடும்பத்தை சேர்ந்த இவர் வேலை மற்றும் நடிப்பின் மீது ஆர்வத்தால் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி விட்டார். இருந்தும் அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீடு இன்னும் ஊரில் அப்படியே உள்ளது இந்நிலையில் தற்போது அந்த வீடு கவனிக்க ஆள் இல்லாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here