பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் வெகு விமர்சையாக தொடங்கவுள்ளதை அடுத்து இதன் ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. இப்படி
ஒரு நிலையில் இந்த சீசனில் புது மாற்றமாக செப் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் கலந்து கொள்ளாத நிலையில் அவருக்கு பதிலாக யார் நடுவராக வரபோகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகரும் சமையல் ஜாம்பவனுமான மாதம்பட்டி ரங்கராஜ் வருவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் செப் தாமு மற்றும் ரங்கராஜ் இருவரும் ஒன்றாக வரும் பல வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் இதில் எந்த பிரபலங்கள்
எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் இடையே மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இதில் இர்பான், விடிவி கணேஷ், தினேஷ், பூர்ணிமா , ஜாக்குலின் போன்ற பலர் கலந்து கொள்ளூம் நிலையில் இவர்களின் வரிசையில் மேலும் ஒரு போட்டியாளராக விஜய் டிவி முன்னணி பிரபலம் ஒருவரும் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம
வைரளாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா இந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது…………………