ஒரு வழியா ஹனிமூன் முடிஞ்சது … அடுத்த பயணத்தை கிளப்பிய நயன்-விக்கி ஜோடி … அதுவும் எங்கன்னு பாருங்க …..

372

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல இந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். அதன்

பின்னர் கணவன் மனைவியாக பத்திரிக்கையாளர்களை சந்திந்த இருவரும் தங்களது நன்றிகளை பலருக்கும் தெரிவித்த நிலையில் நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளனர். அதில் பலரும் நயன்தாராவிடம் ஹனிமூன் குறித்து கேட்டபோது வெட்கத்துடன் சிரித்தபடி அம்மிணி பேசாமல் இருந்த நிலையில் விக்னேஷ் சிவன் அது எல்லாம் இப்போதைக்கு எந்த பிளானும் இல்லை என கூறியிருந்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக இருவரும் நைசாக தாய்லாந்து பறந்து சென்று தங்களது ஹனிமூன் வாழ்க்கையை கொண்டாடி உள்ளனர். மேலும் அங்கு

இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் ஏங்க வைத்துள்ளனர். இதையடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைராளாகி வருகிறது மேலும் அடுத்தடுத்த புகைப்படங்கள் எப்போது வரும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தங்களது ஹனிமூன் ட்ரிப்பை முடித்து தாயகம் திரும்பியுள்ளனர் நயன்-விக்கி ஜோடி. அதனை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தாய்லாந்து ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது

அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் வாசல் வரை வந்து அவர்களுக்கு டாட்டா காட்டி வழியனுப்பும் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதனையடுத்து ஹானிமூன் முடித்துள்ள நிலையில் அடுத்து என்ன பிளான் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சென்னை வந்ததும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடிக்கவுள்ளார் அதேபோல் விக்னேஷ் சிவனும் தல அஜித்தை வைத்து ஏகே 62 பட வேலையை துவங்கவுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here