தமிழ் சினிமாவில் பொறுத்தவரை இன்றைக்கு முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்கள் துவக்கத்தில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தே இன்றைக்கு இந்த நிலைக்கு வந்துள்ளார்கள் எனலாம் . அதிலும் ஹீரோக்களை தாண்டி காமெடி நடிகர்களாக நடிக்கும் பலரும் இதுபோன்ற முறையிலேயே சினிமாவில் நுழைந்துள்ளர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில்
வெண்ணிலா கபடி குழு எனும் படத்தில் பரோட்டா காமெடி ,மூலம் பிரபலமாகி இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் பரோட்டா சூரி. இவர் முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர்
நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது என்னவோ பரோட்டா காமெடி மூலமாக பின்னாளில் அதுவே அவரது அடையாளமாக மாறிப்போனது. இவ்வாறு இருக்கையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருவதோடு குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் . இதனை தாண்டி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் சினிமாவில் நுழைந்த பின்னர்
சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆனாலும் சொந்த ஊரான மதுரையில் பல ஹோட்டல்களை ஆரம்பித்து தொழில் செய்து வருகிறார் . மேலும் சூரிக்கு மதுரையில் ராஜாகூர் என்ற ஊர் தான் சொந்த ஊராம் இந்த ஊரில் இவருக்கு சொந்த வீடு ஒன்றும் உள்ளதாம். அந்த வீட்டின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது….