தற்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான படங்கள் பெரிதும் வெற்றியடைய காரணம் அந்த படத்தின் கதை மற்றும் நடிகர்கள் என்றால் அதையும் தாண்டி அந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரிதளவில் பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில் தனது துள்ளலான இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி பல படங்களை ஹிட் அடிக்க செய்தவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன். பல இளைஞர்களின் விருப்பமான இசையமைப்பாளர் ஆக வலம் வரும் அனிருத் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இசைதிறமையால் மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். என்னதான் இவர் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இவரது சர்ச்சைகள் இதைதாண்டியே இருக்கிறது எனலாம் அந்த அளவிற்கு பீப் பாடல் தொடங்கி சுசி
லீக்ஸ் வரை பலவேறு சர்ச்சைகளில் புகுந்து விளையாடியுள்ளார் அனிருத். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது பலான வீடியோ மற்றும் நடிகை அன்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண்ட்ரியா உடனான தனது காதல் முறிவு குறித்து பேசியிருந்தார் அதில் நானும் ஆண்ட்ரியாவும் காதல் பிரேக்கப்
செய்து விட்டோம் சொல்லப்போனால் எங்களுடையது உண்மையான காதல் என்றே சொல்ல முடியாது அதைத்தாண்டி நான் அவரை காதலிக்கும் போது எனக்கு வயது 19 ஆனால் அவருக்கோ வயது 25 தாண்டி இருந்தது இதனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து பிரிந்து விட்டோம் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….