Friday, October 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்நடிகர் விஜய்காந்தின் கால் விரல்கள் அகற்றம்... ஐசியு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் !!! உறைந்துபோன...

நடிகர் விஜய்காந்தின் கால் விரல்கள் அகற்றம்… ஐசியு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் !!! உறைந்துபோன திரையுலகினர் ……

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல வருடங்கள் நடிகர் சங்கத்தலைவராக இருந்து பல நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மற்றும் திரையுலகில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் என எல்லாராலும் கம்பீரமாக அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்தும் சமூக சிந்தனை கொண்டது மட்டுமின்றி ஏழை மக்களின் வாழ்க்கையை

மையபடுத்தி எடுக்கப்படும் நிலையில் எளிதில் அவர்களில் ஒருவனாக தன்னை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக பல உதவிகளையும் செய்துள்ளார் மேலும் செய்தும் வருகிறார். இவ்வாறு இருந்த நிலையில் படத்தை தாண்டி அரசியலின் மீது ஆர்வம் கொண்ட விஜயகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கையை விடுத்து முழுநேர அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வந்ததோடு தனது தேமுதிக கட்சியை தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவாக்கி

 

உள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது உடல்நிலை மோசமான நிலையில் உடல் மற்றும் மனதளவில் பெரிதளவில் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாத நிலையில் தற்போது அதற்கு பலத்த சிகிச்சை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட இவருக்கு மேற்சிகிசைக்க்காக அமேரிக்கா சென்று வந்தார் அதன் பின்னர் ஓரளவுக்கு உடல்நலம் தேறிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு

உடல்நிலை மோசமான நிலையில் அரவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகமான காரணத்தால் அவரது வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை வேதனையில் உறைய செய்துள்ளது…

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments