தற்போது திரைபடங்களில் நடித்து அதன் மூலம் பிரபலத்தை தேடி கொள்பவர்களை காட்டிலும் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி அவதூறாக பேசி அதன்மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்கள் தான் அதிகம் எனலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையிலும் இவர் பிரபலமானது என்னவோ நடிகர் நடிகைகளை பற்றிய பல அந்தரங்க தகவல்களை வெளிப்டையாக கூறியதன் மூலமாக தான் எனலாம். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக எல்லைமீறிய நிலையில் அடிக்கடி நடிகைகளை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கி
கொள்கிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் சின்னத்திரை பிரபல நடிகையான ரேகா நாயர் அரைகுறை ஆடையில் நடித்திருந்தார் மேலும் இதற்கான காரணம் குறித்து அவரே விளக்கமும் கொடுத்து இருந்தார். இதற்கிடையில் இது குறித்து பேசிய பயில்வான் மிக மோசமாக அவரை பேசியதோடு வீடியோவில் கண்டபடி திட்டித்தீர்த்து உள்ளார். மேலும் அவர் நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் பார்த்திபனை கட்டிபிடித்து முத்தம்
கொடுத்தார் எனவும் படுமோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதையடுத்து வழக்கம்போல் பயில்வான் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது அவரை பார்த்த ரேகா நாயர் மிகுந்த கோபமடைந்து அவரிடம் என்னை பற்றி தெரியாமல் நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என கேட்டுள்ளார் இதற்கு பதில் கொடுத்த பயில்வான் நீ அப்படி நடிச்ச அதனால தான் நான் பேசினேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிபோக உன் மனைவி பிள்ளையா இருந்த இப்படி பேசுவியா இதுக்கு மேல எதவது பேசுன செருப்பு பிஞ்சிடும் என
கடுமையாக பேசியுள்ளார். பொதுவெளியில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது அதன்பின் அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதனபடுத்தி அனுப்பியுள்ளனர். இது பயில்வான் ரங்கநாதனுக்கு ,முதல் முறை கிடையாது ஏற்கனவே இதேபோல் ராதிகாவும் சண்டை போட்டுள்ளார் இருப்பினும் இது எதை பற்றியும் துளியும் கவலை இல்லாமல் தொடர்ந்து தனது லீலைகளை செய்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்….