இன்றைக்கு தமிழ் சினிமாவில் படங்களில் எத்தனையோ பல புதுமுக நடிகர்கள் வில்லனாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி வரும் நிலையிலும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ரகுவரன். சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது கம்பீரமான குரல் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த இவர்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத நிலையில் காலமானர். இவர் சினிமாத்துறையில் பிரபலமாக இருந்தபோதே பிரபல நடிகையான ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் சிறிது காலமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் அவர் மறைந்து பல வருடங்கள் ஆன் நிலையில் சமீபத்தில் அவரது மனைவியான ரோகினி பேட்டி ஒன்றில்
பேசுகையில் ரகுவரன் குறித்து பல உருக்கமான தகவல்களை கூறியுள்ளார். அதில் ஒரு பெண் கணவன் வீட்டுக்கு சென்றால் இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என சொல்லிகுடுத்தே வளர்க்கபடுகிறது அந்த பெண்ணுக்கான சுதந்திரம் அப்போதே மறுக்கபடுகிறது அதிலும் அந்த பெண் அந்த வீட்டில் எதாவது ஒரு வார்த்தை மிகையாக பேசிவிட்டால் அவளது நிலை அவ்வளவு தான். இதையடுத்து அந்த பெண்ணின் கேரக்டர் குறித்து சமூகம் தவறாக பேசும் இந்நிலையில் நானும் இதேபோன்ற பிரச்சனையை சந்திந்தே இனி என்னால் அங்கு வாழ முடியாது என
வெளியே வந்தேன். மேலும் அந்த குடும்பத்தை விட்டு வெளியே வந்த பிறகும் இதனை சொல்ல எனக்கு இத்தனை வருடங்கள் தேவையாக இருந்தது. மேலும் ரகுவரன் அவர்கள் இயல்பாக குடிபழக்கம் உள்ளவர் அதுமட்டுமின்றி தான் நடிக்கும் கேரக்டர் தத்ரூபமாக இருக்கவேண்டும் என அதற்காக பல விசயங்களை மெனக்கெட்டு செய்வர் மேலும் அதே போல் வீட்டிலும் நடந்து கொள்வார். அதிலும் ரகுவரன் அதிகமாக வில்லன் கேரக்டரில் நடிப்பதால் அதை அப்படியே வீட்டிலும் காட்டுவதால் நிறைய பிரச்சனைகள் எழுந்து அதனால் நான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன் என ஓபனாக பேசியுள்ளார்….