திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த சில மாதங்களாக தங்களது குடும்ப வாழ்க்கையை முறித்து கொள்ளும் விதமாக விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நட்சித்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் பிரபல முன்னணி நடிகர் நடிகைகளான நாகசைதன்யா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடிக்கும்
போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இருவரும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது இந்த விவாகரத்து முடிவுக்கு
காரணம் பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் தான் என பிரபல பாலிவுட் நடிகரும் சர்ச்சை நாயகனுமான கேஆர்கே சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அது குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அமீர்கான் இந்த விவாகரத்து விசயத்தில் எந்த அளவிற்கு வற்புறுத்தினார் என்ற முழுகதையும் எனக்கு நன்றாக தெரியும் எனவும் விரைவில் இது குறித்த தகவல்களை வெளியிட போவதாகவும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் தற்போது தான் நாகசைதன்யா ஹிந்தியில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து
முடித்துள்ளார் அதைத்தாண்டி அந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோசன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை உறைய வைத்தது மட்டுமின்றி இது தெரியமாலே நாகசைதன்யா அவருடன் படம் நடித்துள்ளார என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த தகவல் வெளிவந்தும் இதுவரை இது சம்பந்த்மப்ட்ட யாரும் இது குறித்து எந்த பதிலும் கொடுக்கவில்லை ….