தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இளம் நடிகைகளின் வரத்து அதிகமானதை அடுத்து பல முன்னணி நடிகைகள் சினிமாவை விட்டு விலகி வரும் நிலையில் இன்னமும் தனது மார்க்கெட் குறையாமல் பார்த்து வருகிறார். இப்படி இருக்கையில் அம்மிணியும் பிரபல இயக்குனரான விக்னேஷ்
சிவனும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்திற்கு சென்று வந்ததை அடுத்து தற்போது இருவரும் அவரவர் பட வேளைகளில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் எனும் படத்தில் நடித்து வருகிறார் அதேபோல்
விக்னேஷ் சிவன் தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் அடிக்கடி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இணைய பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நயன்தாராவின்
ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். காரணம் அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா எக்குதப்பாக போஸ் கொடுத்த புகைப்படங்களுக்கு லைக் செய்து அதனை தனது இணைய பக்கத்தில் டேக் செய்துள்ளார். இதனையடுத்து பலரும் அவரிடம் எதற்கு இது மாதிரி செய்தீர்கள் என கேள்வி எழுப்பி வருவதோடு அந்த புகைப்படத்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர்…