தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து வருவதோடு திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலேயே பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார். இருப்பினும் இவர் தெலுங்கில் இதற்கு முன்னரே பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் இருந்தும் இவருக்கு திரையுலகில் தனி
அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்கள் தான் . இந்த படங்களை அடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருவதோடு பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவர் கொண்டா லைகர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருவதோடு அவரே அந்த படத்தை தயாரித்தும் வருகிறார். குத்து சண்டையை மையமாக கொண்ட இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னாள் குத்துசண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார் அதோடு ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் வேலைகள் முடிந்த நிலையில்
வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் படத்தை பார்ர்க்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில் இதன் காரணமாக விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர். அதில் இருவருமே பல சர்ச்சையான கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருந்தனர் அப்படி இருக்கையில் கரன் அனன்யா பாண்டேவிடம் நைசாக விஜய் தேவர்கொண்டா பற்றி கேட்டதற்கு அவர் உடனே ராஷ்மிகா மந்தனவை விஜய் காதலிக்கிறார் என கூறியுள்ளார். இதைகேட்ட விஜய் தேவர்கொண்டா நீங்கள் அப்படி நினைகிறீர்களா என கேட்க அதற்கு அனன்யா
ஆமாம் என பதில் கொடுத்துள்ளார். இது குறித்து விளக்கம் கொடுத்த விஜய் தேவர்கொண்டா ராஷ்மிகா தன்னுடைய நல்ல நண்பர் அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன் . அவர் என்னடைய டார்லிங் அவரை மிகவும் நான் நேசிக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு முன்னரே இவர்களது காதல் வதந்திகள் திரையுலகில் காட்டு தீயாய் பரவி வரும் நிலையில் அனன்யா அதில் மேலும் கொளுத்தி போட்டுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….