சின்னத்திரை பொருத்தவரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் இயக்கி வருகிறது அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாகி வருவதோடு இதில் கலந்து நடிகர் நடிகைகளும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் இந்த சேனலில்
ஒளிபரப்பாகும் சமையல் மையமாக நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசனை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனின் இறுதிவாரத்தை நெருங்கியுள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களாக ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இதில்
யார் அந்த டைட்டிலை தட்டி செல்ல போகிறார் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது எனலாம் . இதையடுத்து இந்த வாரம் தொடர் ஒளிபரப்பாக ஐந்து மணிநேரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து யார் அந்த டைட்டிலை தட்டி செல்ல போகிறார் என்ற ஆர்வம் மிகுதியாக உள்ள நிலையில் இம்முறை அந்த டைட்டிலை ஸ்ருதிகா வென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் மறைந்த பிரபல முன்னணி நடிகர் தேங்காய்
சீனிவாசனின் பேத்தி மேலும் இவர் சூர்யா உட்பட பல நடிகர்களுடன் ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே தனது சுட்டிதனத்தாலும் வெகுளியான சிரிப்பு மற்றும் பேச்சால் பலரது மனதை கொள்ளை கொண்டார் அதுமட்டுமின்றி தான் இருக்கும் இடத்தை எப்போதுமே பாசிடிவாக வைத்துகொள்ள கூடியவர் ஸ்ருதிகா இப்படி இருக்கையில் ஸ்ருதிகா டைட்டில் வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்….