தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல மாறுபட்ட கதைகளை கொண்ட பிரமாண்டமான படங்கள் வெளியாகி உலகளவில் மக்களை வியக்க செய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளிவந்த பான் இந்தியா படங்களான கேஜிஎப், விக்ரம் போன்ற படங்கள் வேற லெவலில் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுக்க பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருவதோடு அதில் பல மொழிகளை சேர்ந்த
முன்னணி நடிகைகளை ஒன்றாக நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி , பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதையடுத்து தற்போது இதுபோன்ற பாணியில் பான் இந்தியா படம் ஒன்றில் சூர்யா நடிக்க உள்ளார் இருந்தும் அந்த படத்தில் சூர்யா ஹீரோவாக இல்லாமல் விக்ரம் படத்தில் நடித்தது போன்ற முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான
பிரபாஸ் ஹீரோவாக நடிக்க பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ப்ராஜெக்ட் கே என தலைப்பு வைத்துள்ளனர் அதுமட்டுமின்றி 2050-ம் ஆண்டில் உலகில் என்ன நடக்கும் என்பதை காட்டும் அறிவியல் படமாக இதை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தினை ஏறக்குறைய சுமார் 500-கோடிக்கு எடுக்க உள்ளதாக படக்குழு தீர்மானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் ஹிந்தியில் இருந்து அமிதாபச்சன், தீபிகா படுகோனே தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழில் சூர்யா போன்ற பல முன்னணி பிரபலங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இந்த படத்தின் தகவல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் ….