தமிழ் சினிமாவில் பொறுத்தவரை எத்தனையோ இயக்குனர்கள் புதிதாக உருவாகி வருவதோடு பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு இயக்குனரும் தனக்கென தனி ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து பல வருடங்களாக வித்தியாசமான பல கதைகளை கொண்ட படங்களை இயக்கி அதன் மூலம்
திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் செல்வராகவன். இதை தொடர்ந்து இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுபேட்டை போன்ற பல படங்களில் நடித்து தன்னை மக்கள் மத்தியில் ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்ட பிரபல நடிகையான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில்
சோனியா அகர்வால் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதயு இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இதனை தொடர்ந்து இருவரும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் சோனியா அகர்வால் தனது இணைய பக்கத்தில் கையில் மேஹந்தியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைபார்த்த பலரும் இது என்ன கல்யாண மேஹந்தியா
ரெண்டாவது கல்யாணம் பண்ண போறீங்கள என்பது போலன பல கேள்விகளை தொடர்ந்து கேட்டு வந்ததை அடுத்து அதற்கு பதில் கொடுத்த சோனியா என்னுடைய கல்யாண மெஹந்தி இவ்வளவு சின்னதா இருக்காது என கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இது அவரது திருமண மெஹந்தி இல்லை என்பது புரிந்த போதிலும் அம்மிணி மீது பரவலான காதல் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது ……