தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவும் வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகையான குஷ்பூ. இவர் முதன் முதலில் வருஷம் பதினாறு படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானர் தனது முதல் படத்திலேயே பப்ளியான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவருக்கு
ரசிகர்கள் சிலர் கோவிலே கட்டியுள்ளார்கள் என்றால் அது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் குஷ்பூ பிரபல இயக்குனரான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அனந்திகா மற்றும் அவந்திகா என இருமகள்கள் உள்ளார்கள். இருவருமே அப்படியே அம்மாவையே உறித்து வைத்தாற்போல் இருந்தாலும் உடல் எடையில் சற்று பெருத்து காணப்பட்ட பலரும் இவர்களை உருவகேலி செய்து வந்தனர் இதற்கு குஷ்பூ பலமுறை கண்டனம் தெரிவித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் தங்களை கிண்டல் செய்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பூவின் மகள்கள் இருவரும் தங்களது
உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிப்போனதோடு பார்ப்பதற்கு இளம் ஹீரோயினாக காட்சி தருகிறார்கள். இதையடுத்து தங்களது மகள்களுக்கே போட்டியாக குஷ்பூவும் தனது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்நிலையில் விரைவில் குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகவுள்ளராம் இதற்காக லண்டன் சென்று நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் அடுத்து ஹீரோயினாக களமிறங்க உள்ளார். இதையடுத்து இளைய மகளான அவந்திகாவும் உடல் எடையை
குறைத்து உள்ள நிலையில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தான் இப்படி மாறிவிட்டார் என பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு பதில் கொடுத்த அவந்திகா ஒரு பதினாறு வயசு பொண்ணு எப்படி ஆபரேசன் செஞ்சுகுவாங்க கொஞ்சம் யோசிச்சு பேசுங்க என கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது இளைய மகளின் புகைப்படத்தை குஷ்பூ வெளியிட்டு இருந்தார் அதில் அவர் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் முடிக்கு கலர் செய்து செம மாடர்னாக போஸ் கொடுத்து உள்ளார் ……