Home இதர செய்திகள் அவங்க எல்லாம் என் அம்மா இல்ல ஓபனாக பேசிய வனிதாவின் மகன் …. கடுப்பில்...

அவங்க எல்லாம் என் அம்மா இல்ல ஓபனாக பேசிய வனிதாவின் மகன் …. கடுப்பில் கொந்தளித்த சர்ச்சை நாயகி …..

0
1393

பிரபல தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் தங்களை பிரபலபடுத்தி கொண்ட நிலையில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகளால் பிரபலமானவர் என்றால் அது பிரபல சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமார் தான். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே திரையுலகில் அந்த காலத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில்

அடையாளபடுத்தியது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரது குடும்ப வாழ்க்கை மிகவும் குழப்பமானது எனலாம் காரணம் இவருக்கு இதுவரை நான்கு முறைகளுக்கு மேலாக திருமணம் நடந்து விவாகரத்தும் முடிந்துள்ளது. அந்த வகையில் இவர் முதன் முதலில் கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இருபிள்ளைகள் உள்ளார்கள். இதையடுத்து சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு

ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் ஆகாஷ் தனது மகனான ஸ்ரீஹரியை தன்னுடன் இருக்கவேண்டி கோர்ட்டில் முறையீடு செய்ததை அடுத்து அவரது மகன் அவருடன் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து வனிதா அடுத்து திருமணம் செய்து அதுவும் பாதியிலேயே போனது இதனை தொடர்ந்து சில காலம் டான்ஸ் மாஸ்டரான இராபர்ட் உடன் காதல் பழக்கத்தில் இருந்து வந்தார். பின்னர் அதுவும் இல்லாமல் போன நிலையில் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு மகள்கள் இருந்த நிலையில் ஏற்கனவே திருமணமாகி வாழ்ந்து வரும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் பின்னர் அதுவும் இறுதியில் விவாகரத்தில் போய்

முடிந்தது. இப்படி இருக்கையில் வனிதாவின் மகனான ஸ்ரீஹரி அவரது தந்தை பராமரிப்பில் வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் இணையத்தில் அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வனிதாவின் மகனா என கேட்டதற்கு இல்லை நான் ஆகாஷின் மகன் கூறிய நிலையில் எனக்கும் வனிதாவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என ஓபனாக கூறியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதாவிடம் இது குறித்து கேட்டபோது இது உண்மைதானே ,மற்றபடி எனக்கும் அவனுக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லை அவனை நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் அவன் ஆள் வளர்ந்துட்டான் ஆன அறிவு இன்னும் வளரல ரெண்டுமே லூசு தான் என்ன இருந்தாலும் விஜயகுமார் ரத்தம் அவன் உடம்புக்குள்ள ஓடிட்டு இருக்குன்னு கூறியுள்ளார்……

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here