கடந்த சில வாரங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரவலாக பேசப்பட்டு வந்த மற்றும் வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் ஆகியோரின் திருமணம் தான். காரணம் இருவருக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில் அவர்களது துணையை விடுத்து இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் அதுமட்டுமின்றி உருவத்தில் பார்ப்பதற்க்கு செம குண்டாக இருக்கும் ரவீந்தரை பணத்திற்காக
மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாகவும் பல கருத்துகள் வெளிவரும் நிலையில் இவர்களது ஜோடியை பலரும் இணையத்தில் கிண்டல் கேலி செய்து வருவதோடு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் இது எதை பற்றியும் துளியும் கவலைபடாமல் இருவரும் ஹனிமூன் ரோமன்ஸ் என இருப்பதோடு இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில்
பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ரவீந்தர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றும் வீட்டில் இல்லாமல் சூட்டிங் என்று கூறி காலையிலேயே வீட்டை விட்டு சென்று விட்டராம் மகாலட்சுமி. மேலும் இன்று புரட்டாசி ஒன்று காரணமாக அவரது மாமியார் ஸ்பெசலாக சைவ விருந்தை ஏற்பாடு செய்து கொடுத்ததை அடுத்து அதனை ரவீந்தர் சூட்டிங் ஸ்பாட்டுக்கே கொண்டு சென்றுள்ளார். மேலும் சண்டே பாமிலி டைம் என எல்லாரும் சொல்லும்
நிலையில் ஆனால் எனக்கு அது துரதிஷ்டவசமாக உள்ளது காரணம் அன்பே வா சூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஷோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன். அதோடு பொண்டாட்டி மகாலக்ஷ்மி சங்கர் எல்லா பாத்திரத்தையும் ஒழுங்கா வீட்டுக்கு திருப்பி கொண்டு வந்துவிடு இல்லை என்றால் மாமியார் கொடுமை மட்டுமின்றி அம்மா என்னையும் டன்ஷோவில் சேர வைத்து விடுவார் என சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கலள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் செம வைரலாகி வருகிறது….