தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான விமர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி
தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே. இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக பலரும் இவரை கலாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற தம்பதி பல ரொமண்டிக்
புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர், இதையடுத்து பல தனியார் யூடுப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகின்றனர் இவ்வாறு இருக்கையில் இவர்களது திருமணம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி தனது காதல் மனைவிக்காக ரவீந்தர் 300-க்கும் மேற்பட்ட பட்டு புடவைகள் மற்றும் உடல் முழுவதும் தங்க நகைகளால் குளிப்பாட்டி உள்ளார் மேலும் காதலிக்காக தனியாக சொகுசு வீடு ஒன்றையும் கட்டியுள்ளார் அந்த
வீட்டில் உள்ளேயே நீச்சல் குளம் இருப்பதோடு பல அதிநவீன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் மேலும் இதற்காக சுமார் எழுபது லட்சங்களுக்கு மேலாக செலவு செய்துள்ளார். இதையெல்லாம் தாண்டி இருவருக்கும் ஆன கல்யாண கட்டிலை தங்கத்திலேயே வார்த்து எடுத்துள்ளார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை வாயடைக்க செய்துள்ளது …