தமிழ் சினிமாவில் படங்களில் பொறுத்தவரை கிராமத்து கதை நல்ல முரட்டுத்தனமான உடலமைப்பு மற்றும் நடிப்பு நல்ல கறிவிருந்து என நினைத்தாலே முதலில் நமக்கு நினைவுக்கு பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரனாக தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தனது வீரமான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் ரசிகர்களாக வைத்து இருப்பதோடு இன்றளவும் பல படங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஜீனத்
எனும் மகள் உள்ள நிலையில் இவரது மகளான ஜீனத் சமீபத்தில் நாதஸ்வரம் சீரியல் புகழ் நடிகர் முனீஸ்ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வு தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுன்டிவியில் முன்னணி தொடராக ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் சம்மந்தம் எனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் முனீஸ் ராஜா. இவர் பிரபல முன்னணி
நடிகரான சன்முகராஜாவின் சகோதரர் ஆவார் இருப்பினும் அவரது பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் தனது நடிப்பால் உயர்ந்து இன்றைக்கு பல முன்னணி படங்களில் கூட நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரும் ராஜ்கிரண் மகளான ஜீனதும் பேஷ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் சொன்னதை அடுத்து இருவீட்டாரும் சில காரணங்களால் இவர்களது காதலை எதிர்த்து உள்ளனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து ஓடிபோய் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையிலும் ராஜ்கிரனின் மனைவி இன்னமும் இவர்களது விசயத்தில் கோபமாக உள்ளாராம். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…..