தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பிரமாண்டமான படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் பலத்த வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரபு உள்ளிட்ட
பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தவர் பிரபல முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள். இதையடுத்து சரத்குமார் அவர்கள் திரையுலகில் தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமான நிலையில் அடுத்து ஹீரோவாக அறிமுகமாகி நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போதும் தொடர்ந்து படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர
கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சமத்துவ மக்கள் கட்சியின் பொது தலைவராக இருந்து வரும் சரத்குமார் அவர்கள்அரசியலிலும் தன் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் சினிமா மற்றும் அரசியல் என செம பிசியாக இருந்து வரும் சரத்குமார் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்ட ஹைதராபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த
வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, அவருக்கு சிறிய வயிற்று வலி மற்றும் சளி தொந்தரவு காரணமாகவே மருத்துவமனை சென்று உள்ளதாகவும் மேலும் இது எப்பொழுதும் போல நார்மல் செக்கப் தான் என்றும் அவர் தற்போது சென்னை வர இருப்பதாகவும் அவர் தரப்பினர் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது…….