இன்றைக்கு திரையுலகில் பொறுத்தவரை படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் புதுமுகங்களாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் நிலையிலும் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு கனவு கன்னியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தனது
நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகா. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் அதிகளவில் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக பல படங்களில் நெருக்கமாக நடித்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போன நிலையில் இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து
கொண்டனர். இதனைதொட்ரந்து சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகிற்கு ரீன்ட்ரி கொடுக்க நினைத்த ஜோ கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வையத் படத்தில் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல நல்ல கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட மலையாளத்தில் பிரபல நடிகரான
மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார் இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஜோதிகா திருமணத்தின் போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்த பலரும் இவங்க இந்த தேவதைய பெத்தவங்கள என வாயடைத்து போயுள்ளனர்…..