திரையுலகில் பொறுத்தவரை தற்போது பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் புதுமுகங்களாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில மட்டுமே தங்களது பின்புல பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் பலர் வந்த இடமே தெரியாமல் போன நிலையில் ஒரு சிலர்
மட்டும் தொடர்ந்து தங்களை பிரபலபடுத்தி கொள்ள போராடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்களின் உறவினர் முறை தம்பியான விக்ராந்த் அப்படியே ஒரு வகையில் விஜயை உரித்து வைத்தாறஇருப்பதோடு பேச்சு உடல்வாகு என அனைத்தும் அவரை போலவே செய்யும் நிலையில் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தபோதும் இன்னும் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல்
தவித்து வருகிறார். இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் , குணசித்திரம் என கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ராந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மானசா ஹேமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் இவர்களது
சமீபத்திய குடும்ப புகைபடம் மற்றும் சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. காரணம் அவரது மனைவி ஹேமா விக்ராந்தை திருமணம் செய்வதற்கு முன்னரே சன் டிவியில் பிரபல முன்னணி தொடரான உதிரிப்பூக்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது……