சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிறதோ அதைகாட்டிலும் அதில் நடிக்கு நடிகர்களும் மக்களிடையே பிரபலமாவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு இணையாக இந்த சேனலில்
வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தற்போது இதில் பலரும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சேனலில் பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் விஜே ரம்யா. இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல பட நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து பிட்னஸ் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தனது உடலை கட்டுகோப்பாக வைத்து இருப்பதோடு தனியாக யூடுப் சேனல் நிறுவி அதில் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் ரம்யா கடந்த 2014-ம் ஆண்டு அப்ரஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி
முழுதாக ஒரு வருடம் கூட முடியாத நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ரம்யா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கையில் சமீபத்தில் இவர் தனது முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைபடத்தில் அவரது கணவரை பார்த்த பலரும் என்னது இவரா இவரோட முதல் கணவர் என வாயடைத்து போயுள்ளனர்……