வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளுக்கும் பலரும் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் பிரபல சேனலான விஜய் டிவியில் வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவருக்கும் இடையில் நடக்கும் முக்கோண காதலை மையமாக
வைத்து எடுக்கபட்டு வரும் நிலையில் இந்த சீரியல் மக்களிடையே வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அமிர்தா எனும் கதாபத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ரித்திகா. இவர் இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் முன்னனி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம். இதையடுத்து தற்போது பல முன்னணி ரியாலிட்டி
நிகழ்ச்சிகளில் பிசியாக நடித்து வரும் ரித்திகா கடந்த மாதம் வினு என்பவரை இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் முடிந்த கையோடு மாலதீவுக்கு ஹனிமூன் பறந்த ரித்திகா அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கும்படியான பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். இதனைதொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இவருக்கும் எழிலுக்கும் இடையில் காதல் கதைகளம் தான் வெகு விமர்சையாக அரங்கேறி வருகிறது. இப்படி இருக்கையில்
திருமணம் முடிந்த நிலையில் இனி ரித்திகா சீரியலில் நடிக்க மாட்டார் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் தான் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் தனது ஹனிமூன் முடிந்த மறுகணமே மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இதனை உறுதிபடுத்தும் வகையில் ரித்திகா தனது இணைய பக்கத்தில் பாக்கியலட்சுமி சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார் . இதையடுத்து இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் இன்ப பெருமூச்சு விட்டு வருகின்றனர்……
View this post on Instagram