தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா. கிராமத்து கதைகள் என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவதே இவராகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு தனது படத்தில் வரும் நடிகர் நடிகைகளை தாண்டி அந்த படத்தில் சிறு கல்லை கூட நடிக்க வைத்து இருப்பார். இந்நிலையில் இவர் தனது படத்தின் மூலமாக அறிமுகபடுத்திய
பலரும் தற்போது சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள் இப்படியொரு நிலையில் பாரதிராஜா அவர்களால் அந்த காலத்தில் கிராமத்து மண் வாசனை கொண்ட படங்களில் ஹீரோவாக அறிமுகபடுத்த பட்டவர் பிரபல நடிகர் பாபு. இவர் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த என் உயிர் தோழன் படத்தின் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானர். தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பு இயல்பான
தோற்றத்தால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இவருக்கு அடுத்து பதினான்கு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இப்படி இருக்கையில் இவர் மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தில் வந்த சண்டை காட்சி ஒன்றில் மாடியில் இருந்து குதிக்கும் போது தவறி விழுந்து முதுகில் அடிபட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை
அளிக்கப்பட்டு நிலையில் எப்படியோ உயிர் பிழைத்த போதிலும் அவரால் சகஜமாக எழுந்து நடக்க முடியாமல் போனது. இதையடுத்து அந்த நாளில் இந்நாள் வரை படுத்த படுகையாக இருக்கும் பாபுவின் வாழ்க்கையே வீணாக போனது. இப்படி இருக்கையில் அவரது நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதை அடுத்து சமீபத்தில் இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது அந்த வீடியோவை பார்த்த பாரதிராஜா உடனே அவரை நேரில் சென்று பார்த்ததுடன் அவருக்கு ஆறுதல் கூறி அவரது இந்த நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார்………