கடந்த சில மாதங்களாக திரையுலகில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறதோ அதைக்காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் பதிவுகளும் நிகழ்வுகளுள் தான் வேற லெவலில் வைரளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரான மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு படத்தின் பட ப்ரோமோசன் விழா
நடந்தது . இதில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு பேசிய நிலையில் இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் படம் குறித்து பேசிய போது யாரும் எதிர்பாரதவிதமாக அருகில் தொகுப்பாளினி கழுத்தில் மாலையை போட்டு விட்டார் இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதை கழற்றி தூக்கி வீசி விட்டார் . இதையடுத்து இந்த அநாகரீகமான செயலால் கடுப்பாகு பத்திரிக்கையாளர் அவரை
மன்னிப்பு கேட்க சொன்னதை அடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் அந்த பெண் தொகுப்பாளினி ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது, அந்த சம்பவத்தை இப்போது நெனச்சாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு, பொதுமேடையில் இது மாதிரி நடந்துகிட்ட என்னங்க செய்ய முடியும் எனக்கு அப்பவே அவர அடிச்சுடலாம் இருந்துச்சு, மேலும் இது முத தடவ இல்ல
ஏற்கனவே இது மாதிரி நடந்த்ருக்கு இனி இது மாதிரி நடந்தா கன்னத்தில் ஒரு அறை ஆவது விழும் இல்லேன்னா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருவேன் என மிகுந்த கோபத்துடன் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………….