மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு இன்றைக்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இதன்
காரணமாக இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளதை அடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆவல் மக்கள் மத்தியில் பெரிதளவில் இருந்து வருகிறது. இபப்டியொரு நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பல
புது மாறுதல்களை கொண்டு வந்துள்ள பிக்பாஸ் குழு இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீட்டை அமைத்துள்ளனர் அதேபோல் போட்டியாளர்களையும் இரண்டு பிரிவாக பிரித்து தங்க வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் ஜிபி முத்து தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் பிக்பாஸ்
வீடு இரண்டாக இருக்கும் போது அப்ப கமல் சார் சனிக்கிழமை ஒரு வீட்டில் பேசி விட்டு ஞாயிற்றுகிழமை ஒரு வீட்டில் பேசுவாரா என அவரது பாணியில் நகைச்சுவையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவை பார்த்த பலரும் பல கருத்துகளை கூறி வருவதோடு இந்த வீடியோவை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்……………….
View this post on Instagram