தென்னிந்திய திரையுலகில் முன்னணி பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் தங்களது துணையை தேடி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெகுவாக மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த
வகையில் துணை நடிகர்களில் ஒருவராக திரையுலக பயணத்தை தொடங்கியதை அடுத்து இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் . இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் ப்ளு ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அருண் பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி
பாண்டியன் நடிக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் முறைப்படி திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தில் வெகு விமர்சையாக நடந்தது. இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர் இதனைதொடர்ந்து இவர்களது வரவேற்பு சென்னையில்
மிக பிரமாண்டமாக நடந்தது . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி பாண்டியன் பேசுகையில், எனக்கு தாலி கட்டும்போது மூணு முடிச்சும் நீயேதான் போடணும் அப்படின்னு கட்டளை போட்டேன் அதேபோல் அவரும் எனக்கு மூன்று முடிச்சையும் அவரேதான் போட்டார் என வெட்கத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………