சினிமாவில் தற்போது பல நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இதில் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவர்களது மார்க்கெட் திரையுலகில் சரிய தொடங்கி விடுகிறது. இப்படியான நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு நடிக்கும் படங்களில் வெறுமனே ஹீரோயினாக நடிக்காமல் கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் இருக்கும் பல கதாபாத்திரங்களை தேர்வு
செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார், இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் நயன்தாரா தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் ஜெட் விமானம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது. காரணம் அதன் மதிப்பு
மட்டுமே சுமார் ஐம்பது கோடிக்கு மேல் இருக்கும் நிலையில் அதில் பல ஆடம்பர வசதிகளும் உள்ளதாம். இதனைதொடர்ந்து இவரிடம் ரூ.1.76 கோடி மதிப்பிலான பி எம் டபுள்யு கார், ஒரு கோடியில் மெசிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபுள்யு 5 போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………..