பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் இருக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருந்து வவரும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாக அமைய உள்ளதாக பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது. அந்த
வகையில் இந்த சீசனில் புது மாற்றமாக இரண்டு வீடுகள் இருக்க போவதாக போட்டியாளர்கள் இரண்டு பிரிவாக பிரித்து தங்க வைக்கப்பட போவதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் இணையத்தில்
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் குழு இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியளர்கள் குறித்த அதிகாரபூர்வ லிஸ்ட் தற்போது வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பிரபல சீரியல் நடிகரான ப்ருத்விராஜ், மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா தாகா, விஷ்ணு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன், பிகில் பட இந்துஜா உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் சீசன் 7 மிகவும் கோலாகலமான முறையில் துவங்க உள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது…………………..