கடந்த சில மாதங்களாக திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் கருத்துகளும் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வைரளாகி வருகிறது . இப்படி ஒரு நிலையில் இதில் பலரும் நெகடிவ் கருத்துகளாக இருந்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் கூல்
சுரேஷ் . இவர் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் வெளிவரும் பல முன்னனி நடிகர்களின் படங்களை ரீவியு செய்யும் விதமாக அவர் செய்யும் சேட்டைகள் காரணமாக பிரபலமானது தான் அதிகம் எனலாம் . இந்நிலையில் சமீபத்தில் கூல் சுரேஷ் பட ப்ரோமோசன் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த விழாவின் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரிக்கையில், மன்சூர் அலிகான்
நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு படத்தின் பட ப்ரோமோசன் விழாவில் கலந்து கொண்டு பேச வந்த கூல் சுரேஷ் கையில் சரக்குடன் வந்து ஏற்கனவே சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கு இருந்த பெண் கழுத்தில் மாலையை போட்டு விட்டார் . அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதனை உடனே கழற்றி தூக்கி வீசியுள்ளார் . கூல் சுரேஷின் இந்த
அநாகரீகமான செயலை கண்டு கொதித்து எழுந்த பத்திரிக்கையாளர்கள் அவரை உடனே அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதை அடுத்து அவர் அந்த பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………