இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக ஏராளமான இளம் நடிகைகள் வந்துவிட்ட நிலையில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகளும் அவ்வளவாக சினிமாவில் வாய்ப்புகள் வராததை அடுத்து பலரும் சினிமாவை விட்டே விலகி போய்விட்டனர் எனலாம். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் சற்றும் இளமை குறையாமல் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்கள்
பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா. இந்நிலையில் ஏறக்குறைய நாற்பது வயதை நெருங்கும் நிலையிலும் இன்றும் துளியும் இளமை குறையாமல் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில்
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து தனது அழகால் பலரையும் வாயடைக்க செய்திருந்தார். இந்த படத்தை அடுத்து உலகநாயகன் கமல் அவர்களின் 234 வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா ரகசியமாக தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம்
உள்ளது. இது குறித்து கேட்கையில், மலையாள சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் நபரும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………