தென்னிந்திய திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகைகள் வேற லெவலில் கொடிகட்டி பரந்து வரும் நிலையில் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருவதோடு டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும்
நிலையில் ராஷ்மிகா குறித்த பல சர்ச்சையான தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஷ்மிகா பிரபல கன்னட நடிகரான ரஷித் ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் திருமணம் வரை சென்றதை அடுத்து சில காரணங்களால் அது பாதியிலேயே நின்று போனது. மேலும் இதற்கு காரணம் என பல கருத்துகள்
மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது இது குறித்து அவரது முன்னாள் காதலாரான ரஷித் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், ராஷ்மிகாவும் நானும் தற்போதும் கூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் அவரவர் படங்கள் வெளியாகும் போது ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பாராட்டி கொள்வோம். மேலும்
ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் உள்ளது அதை அவர் சரியாக புரிந்துகொண்டு தற்போது நேசனல் கிரஷாக வலம் வருகிறார் என மனம் திறந்து பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………..