தற்போது சினிமாவில் நடிப்பவர்களை தாண்டி சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பிரபலமாக இருக்கிறார்கள் இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டிக்டாக் செயலியின் பலரும் பிரபலமாகி இருந்த நிலையில் இதில் ஒருவராக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் டிக்டாக் புகழ் ஜிபி முத்து . இவர் இதையடுத்து யூடுப் தளத்தில் தனக்கு வரும் கடிதங்களை நகைச்சுவையாக
படித்துகாட்டி பலரது மனதையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமானதை அடுத்து பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இந்நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் வேற லெவலில் கலக்கி வருகிறார் . இவ்வாறு
பிரபலமாக இருக்கும் நிலையில் ஜிபி முத்து நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த நிலையில் தனது குடும்பத்தை மட்டுமின்றி தனது தம்பி குழந்தைகளையும் கவனித்து வருகிறார் . இதனைதொடர்ந்து சமீபகாலமாக ஜிபி முத்து வளர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக கார் வாங்கியிருந்தார் இதனைதொடர்ந்து அடுத்த கட்டமாக தனது சொந்த ஊரில் பெரிய அளவிலான நிலத்தையும்
வாங்கியுள்ளார். அந்த வகையில் சுமார் 40 சென்ட் மதிப்பிலான கருவேல மரங்கள் நிறைந்த இடத்தை வாங்கி அதை சுத்தம் செய்து அதில் இயற்கையான முறையில் தோட்டம் அமைப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ………………..