தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் வந்துவிட்ட நிலையில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றனர் . இயக்குனர்கள் பலரும் தங்களுக்கென தனி ஒரு பாணியில் படங்களை இயக்கி வருவதை அடுத்து படத்தை பார்த்தாலே இது இந்த இயக்குனரின் படம் தான் எனும் அளவிற்கு மக்களிடையே வெகு பிரபலமாக உள்ளார்கள் . இந்நிலையில் இயக்குனர்கள் படங்களை
இயக்குவதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து வித்தியாசமான பல கதைகளை கொண்ட படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் மிஸ்கின் . இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மிஸ்கின் நடித்து வருகிறார்
இதனைதொடர்ந்து மிஸ்கின் நேற்றைய நாளில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது, அதில் லியோ படத்தை பார்த்து விட்டதாகவும் அது குறித்து சில கருத்துகளையும் பேசியுள்ளார் . இவ்வாறான நிலையில் பேசும் போது தளபதி விஜய் அவர்களை ஒருமையில் பேசி விட்டதாகவும் தரகுறைவாக பேசியதாகவும் தளபதி ரசிகர்கள் கொந்தளிந்து போனதோடு இவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு
வைரலாக்கி வருகின்றனர் . அந்த போஸ்டரில், தீதும் நன்றும் பிறர்தர வாரா! எங்கள் தளபதியை தரகுறைவாக ஒருமையில் பேசிய அடி முட்டாளே ! மனநலம் குன்றியவனே …!அறிவு கெட்டவனே ..!மன்னிப்பு கேள்……எச்சரிக்கையுடன் தளபதி வெறியர்கள் என பதிவிட்டுள்ளனர் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………..