கடந்த சில வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் தான் என்றால் தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்கனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் தான் . இந்நிலையில் இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகில் அதிகளவில் ஆர்வத்தை தூண்டிய நிலையில் படத்தில்
பல திருப்பங்களும் புதிர்களும் இருந்தது. இதையடுத்து படத்தில் அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான் , சஞ்சய் தத் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் படத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பிரபல நடிகையான மடோனா செபாஸ்டின் கேமியோ ரோலில் நடித்திருந்தார் . மேலும் லியோ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் வேற லெவலில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.
இருந்தும் பலரும் இணைய பக்கத்தில் மடோனா செபாஸ்டின் குறித்து பல விமர்சனங்களை கொட்டிதீர்த்து வருகின்றனர் அந்த வகையில் இவர் இந்த மாதிரி சின்ன ரோலில் நடித்து இருக்க கூடாது என கூறியதை பார்த்த அம்மிணி இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, நான் லியோ படத்தில் பெரிய ஸ்டார் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன் நமக்கு ஒரு
வேலை கொடுத்தால் அதை சிறப்பாக செய்ய வேண்டும். கதாபாத்திரம் பெரியது சிறியது என பார்க்க கூடாது 100 சதவீதம் நம்முடைய உழைப்பை கொடுத்தால் மட்டுமே போதும் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………….